Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1015-ஜென்ம பாவம் இல்லாமலே  
ஜென்ம பாவம் இல்லாமலே
உற்பவித்த ராக்கினியே (2)
நாங்களெல்லாம் உம் பாதத்தை
நாடி வந்தோம் நாயகியே
மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே

பேய் மயக்கும் பாவ வழி - நின்று
எம்மைக் காத்திடுவாய் (2)
தூய வெண்லீலிமலர் போல்
தோன்றினையே பூமிதனில்
மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே

மணிமுடி தாங்கி நிற்கும்
மகிமையின் அரசியே (2)
வானவரும் மானிடரும்
வாழ்த்தி உம்மைப் போற்றுகிறோம்
மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா