1001-மாமரியே எங்கள் மனமகிழ்வே |
மாமறை புகழும் மரியென்னும் மலரே மாதரின் மாமரியே அமலியாய் உதித்து அலகையை மிதித்து அவனியைக் காத்த ஆரணங்கே - 2 உருவில்லா இறைவன் கருவினில் மலர உறைவிடம் தந்த ஆலயமே - மாமறை பழியினைச் சுமந்து உலகினில் பிறந்து ஒளியினை ஏற்றிய அகல்விளக்கே - 2 இருள் திரை அகற்றி அருள் வழி காட்டி வானக வாழ்வை அளிப்பாயே மாமறை |