Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1001-மாமரியே எங்கள் மனமகிழ்வே  
மாமரியே எங்கள் மனமகிழ்வே
மனுக்குலம் போற்றிடும் தாய் மரியே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க மரியே (2)

வான்மதியாய் வையம் வந்தவளே
விண்மீனாய் வழி நின்றவளே (2)
தென்றலாய் மனதுக்கு இதமளிப்பாய் - தேன்
அருவியாய் வாழ்விற்கு வரமளிப்பாய் (2)

காப்பதிலே கருத்தானவளே
கருணையாலே மனம் கனிந்தவளே (2)
இரவும் பகலும் உடனிருந்து உன்
அன்பால் காத்திட வேண்டுமம்மா (2)






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா