Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1001-மாதாவே துணை நீரே மாமரியே எங்கள் மனமகிழ்வே  
மாதாவே துணை நீரே உம்மை
வாழ்த்திப் போற்ற வரம் தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா
ஏற்றன்பாக எமைப்பாரும்

வானோர்தம் அரசே தாயே எம்
மன்றாட்டைத் தயவாய் ஏரும்
ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
எக்காலத்துமே தற்காரும்

ஒன்றே கேட்டிடுவோம் தாயே நாம்
ஓர் சாவான பவம் தானும்
என்றேனும் செய்திடாமல் காத்து
எம்மைத் தூயர்களாய்ப்பேணும்

தஞ்சம் நீரென வந்தோர் தம்மை
தள்ளாத்தான் அறியீராமோ
மிஞ்சும் வல்லமை மேவும் தாயே
வேறார் துணை நீர் தாயே




 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா