1074- |
மாதாவே சரணம் -உந்தன் பாதாரம் புவிக்காதாரம் - கன்னி மாதாவே சரணம் மாபாவம் எம்மை மேவாமல் (2) காப்பாயே அருள் ஈவாயே கன்னி மாசில்லா மனமும் யேசுவின் உள்ளமும் மாந்தரின் தவறால் நோயுறக் கண்டோம் (2) செபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம் பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் மாநிலத்தில் சமாதானமே நிலவ நாஸ்திக உலகம் ஆஸ்திகமடைய (2) உயிருடல் அனைத்தும் உவப்புடன் அளித்தோம் (2) உம் இருதயத்தில் என்றுமே அணைப்பாய் |