1099-மாசில்லா மரியே |
மாசில்லா மரியே மங்காத மதியே அருட்சுடர் பெறும் வழியே - உனை அம்மா என்றழைத்தால் ஆறுதல் தந்து அடைக்கலம் தருபவளே அன்னை நீ வாழ்கவே - எங்கள் மரியே நீ வாழ்கவே 2 ஆகட்டும் என்று அம்மா மொழிந்தாய் எம் மீட்பர் வந்தாரம்மா இதோ உன் தாயென இறைமகன் தந்தார் இன்பமே பெருகுதம்மா வானமும் வையமும் என்றுமே வாழ்த்தும் மகிமையின் தாய்மரியே - இறை மகிமையின் தாய்மரியே அன்னை நீ வாழ்கவே - எங்கள் மரியே நீ வாழ்கவே 2 சீடர்கள் குழுவினில் இறைவனை வேண்டிய ஆவியின் ஓவியமே யேசுவின் வார்த்தைக்குச் செயலுருக் கொடுத்திட பணிக்கின்ற காவியமே பன்னிரு விண்மீன் முடிசூட வாழ்த்தும் விண்ணகப் பேரெழிலே - நிறை விண்ணகப் பேரெழிலே அன்னை நீ வாழ்கவே - எங்கள் மரியே நீ வாழ்கவே 2 மாசில்லா மரியே |