1098-மாசில்லாக் கன்னியே |
மாசில்லாக் கன்னியே மாதாவே உன்மேல் நேசமில்லாதவர் நீசரேயாவர் வாழ்க வாழ்க வாழ்க மரியே (2) மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய் ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் தாயே ஆனதால் தாபரித்தென்மேல் நேசம் வைத்தாள்வது நின் கடனாமே உன்மகன் தானே உயிர்விடும் வேளை என்னை உன் மைந்தனாய் ஈந்தனரன்றோ - வாழ்க! |