Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1097-மலரிலும் சிறந்த மலர் நீயே  
மலரிலும் சிறந்த மலர் நீயே
மகிழ்வனை ஈன்ற தாய் நீயே
வளர்மதி போன்ற வடிவமும் நீயே
வாழ்த்துகின்றோமே எங்களின் தாயே

தாசர்கள் வாழும் தாய்த் திருநாட்டில்
சாந்தியும் அன்பும் நிலைத்திட வேண்டும்
பக்தியும் பண்பும் வளர்ந்திடவே - உன்
திருமகன் இயேசுவை வேண்டிட வேண்டும்
வளர்மதி போன்ற வடிவமும் நீயே
வாழ்த்துகின்றோமே எங்களின் தாயே

தாய் உந்தன் பாதம் நாம் பணிந்தோமே
சேய் எங்கள் நிலையை நோக்கிட வேண்டும்
உண்மையும் நீதியும் வளர்ந்திடவே - உன்
திருமகன் இயேசுவை வேண்டிட வேண்டும்
வளர்மதி போன்ற வடிவமும் நீயே
வாழ்த்துகின்றோமே எங்களின் தாயே






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா