1096-மரியே உன்னைப் போற்றுகின்றோம் |
மரியே உன்னைப் போற்றுகின்றோம் மாதவமே உன்னை வாழ்த்துகின்றோம் (2) இறையே உன்னை ஏத்துகின்றோம் அருள் வடிவே நன்றி கூறுகின்றோம் (2) கிறிஸ்துவின் போதனை செயல்களையே மனதினில் எந்நாளும் தியானம் செய்தாய் (2) இயேசுவை முழுமையாய்ப் புரிந்து கொண்டு உத்தமச் சீடனாய் விளங்கி நின்றாய் (2) இயேசுவின் புரட்சி செயல்களிலே இறைவனைப் புகழ்ந்து பாடி நின்றாய் (2) துன்பங்கள் இயேசுவைச் சூழ்கையிலே உணர்வால் அவருடன் ஒன்றுபட்டாய் (2) மனிதனின் விடுதலைப் பணியினிலே மீட்பதன் கீதம் முழங்கிடுதே (2) விடுதலைப் பணியில் எம்மோடு துணை வரவேண்டும் எம் தாயே (2) |