Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1074-  

மடுப்பதி வாழும் அம்மா
அருட்கடல் நீயே அம்மா
அமைதியின் சுவாசம் நீயே - எம்
ஆறுதல் வாசமே தாயே

அகதியாய் அலைந்தோம் தாயே
தஞ்சமே தந்ததுன் நெஞ்சம் (2)
அடைக்கல பாறைபோல் இருந்து
அனுதினம் காத்திட்டாய் தாயே

உம்பதி வருகின்ற போது
சுமையெல்லாம் மறைந்து போகும் (2)
மடுமாதா உம்பதி மண்ணும் - நல்
மருந்தாக மாறுது எமக்கு






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா