1094-மங்கள மேளம் கொட்டி |
மங்கள மேளம் கொட்டி கொண்டாடுவோம் பெண்களில் பேறுபெற்ற அம்மா மரி (2) நீ மடுவில் எழுந்தாய் விடிவைக் கொணர்ந்தாய் தமிழீழம் மலரவே எமது குறையாவும் தீரவே சரணம் மடுமாதா எங்கள் சந்தோசமே நீதான் - 2 முல்லை வளம் கொழிக்கும் தௌளுத்தமிழரிடை மாதா நீ எழுந்தாய் நெல்லும் மணியும் பல செல்வக்கனி வளங்கள் பெருகிட அருள் புரிந்தாய் (2) உந்தன் அன்பான ஆலயமே - எம் தெம்பான கோட்டையம்மா உன் கண்ணான திருமகனே - எம் பொன்னான வாழ்க்கையம்மா மடு அன்னை உன் தலம் - எமக்கு அடைக்கலம் மரியே வாழ்கவே சரணம் மடுமாதா எங்கள் சந்தோசமே நீதான் - 2 கண்ணின் மணிபோலே எம்மைக் காக்கும் இறைபாலனை ஏந்தி வந்தாய் இன்னல் தீர்த்து நிறை தன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய் (2) நீ சந்தித்த வாழ்வெல்லாம் - மிக சந்தோசமானதம்மா உம்மை நம்பிக் கொண்டாடுகிறோம் - எம்மை நற்கதியில் சேருமம்மா மடு அன்னை உன் தலம் - எமக்கு அடைக்கலம் மரியே வாழ்கவே சரணம் மடுமாதா எங்கள் சந்தோசமே நீதான் - 2 |