Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1092-மருதமடுப் பதியில்  

மருதமடுப் பதியில் கருணை மழை பொழியும்
திருமகள் வருவீரே எம் திருமகள் வருவீரே

மண்ணில் மனிதகுலம் வாழ வழி வகுத்த.....
அண்ணலைக் கையில் தாங்கும் அண்னையே நீர் இரங்கும் (மருத. . .)

சிந்தையில் துள்ளில் தூய்மை சேவையில் அன்பு கொள்வோம்
நொந்தவர்க்குதவி செய்வோம் நோய்க்கு மருந்தை உண்போம் (2)
விந்தைநற் செய்தியேற்றி நிலைமையறிந்து வாழ்வோம் (2)
சுந்தர மாலை சொல்வோம் துணையே நீ இனிய தாயே


உருகி அன்பு பெருகிரோடும் இறைவனோடும்
பெரிதும் துணை புரியும் திருச்சபையோடும் (2)
அருகில் வசிக்கும் மக்கள் அயலார் அனைவரோடும் (2)
அரிய உணவு பெற அம்மா உதவி செய்வாய்

நாட்டில் நலன்கள் குன்றி நாங்கள் வருந்தும் வேளை
காட்டில் இருந்து வந்தாய் கண்ணீர் துடைப்பாய் அம்மா (2)
இரக்கப் புனலில் நின்றாய் குளித்து முழுகி பாவ (2)
அழுக்கைத் துடைத்து நல்ல ஒழுக்கமுடனே வாழ்வோம்

ஏங்கும் தமிழர் நிலம் காவல் புரியும் தாயே
தூங்கும் தமிழர் மனம் மாற்றம் கொடுப்பவளே  (2)
சிந்தும் குருதி நின்று தங்கும் தமிழ் மண் தந்து (2)
வெந்து மடிந்த மக்கள் நெஞ்சம் நிறைத்தவளே (மருத. . .)

எங்கள் நகரில் தமிழ் பங்கின் நலன்கள் நல்கி
வேண்டும் வரங்கள் தந்து நெறிகளும் காப்பவளே (மருத. . .)







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா