1091-மருதமடு மாதாவே |
மருதமடு மாதாவே மனுக்குலத்தின் தாயாரே கருணையருட் செபமாலை கனிந்திட நாம் செய்தாயே மகிமை நிறை மாமரியே மாதவருள் பூரணியே மக்கள் பவம் பொறுத்தருள மன்றாடாய் நின் சுதனை பவம் செய்தோம் பாரினிலே தவம் செய்வோம் உன் தயவால் பட்சமுடன் பாரம்மா பாவியெம்மைக் காரம்மா ஐம்பத்து மூன்றுமணி அனுதினமும் ஓதிடுவோம் மெய்பத்தி தான் பெருக மேதினியில் நீ அருள்வாய் முப்பொழுதும் கன்னிகையே மூவுலகாள் இராக்கினியே இப்பொழுதும் எம்மரணத்திலும் எங்களை நீ காத்திடுவாய் துயரம் நிறைந்த தாயகத்தை தூயவளே பாரம்மா புயல் அரக்க போர் முடிந்து புவி மீள அருள் தாயே நீண்ட காலம் உறங்காமல் நிலம் அழுது கிடக்குதம்மா நின்னருளைப் பொழிந்து அங்கு நீ அருள்வாய் சமாதானம் |