1088-புதுமைகள் புரிந்திடும் |
புதுமைகள் புரிந்திடும் ஆரோக்கியமாதாவே புண்ணிய பூமியின் பாதுகாவலியே உம்மை நாங்கள் போற்ற வந்தோம் உந்தன் ஆசீர் தேடி வந்தோம் கண்கள் கலங்கி கதறிடும் நேரங்களில் ஆறுதல் நீயே தந்திடுவாய் நோய்கள் குறைகள் ஆபத்து விபத்துக்களில் எங்களை நீயே காத்திடுவாய் தேடி வந்தோமே துணையாய் வாரும் தேவனின் தாயே காத்திடுவாய் வாழ்வினை இழந்து வாடிடும் வேளையிலே வலிமை நீயே தந்திடுவாய் உள்ளம் உடைந்து உன்னிடம் வருகையிலே உறவாய் நீயே வந்திடுவாய் அருகில் வந்தோமே ஆனந்தம் தாரும் அன்னையே உம்மை வேண்டி வந்தோம் |