1087-பார் புகழ் பாத்திமா |
பார் புகழ் பாத்திமா அன்னையே மாந்தரின் தாயே உன்னை நினைத்தோம் துதித்தோம் ஒன்றாய் இணைந்து என்றும் புகழ்வோம் பணிவோம் சிந்தை மகிழ்ந்து சிறுவர் மூவருக்குத் தாயே தரிசனம் தந்தாயே உலகம் மனம் மாற - அன்பாய் அழைப்பினை விடுத்தாயே செபமாலை வழியைச் சொல்லித் தந்தாய் நானிலம் வாழ்ந்திட வழி வகுத்தாய் - 2 உன்னைத் தினம் நினைத்தால் - உள்ளம் மகிழ்வால் நிறைந்திடுமே உன் வழி நான் தொடர்ந்தால் - வாழ்க்கை மலராய் மணம் தருமே - என் வாழ்க்கைப் படகுக்குத் துடுப்பானாய் வானக வாழ்வுக்கு வழியானாய் - 2 |