1086-பரமனின் திரு அன்னையே |
பரமனின் திரு அன்னையே பாவியின் அடைக்கலமே அருள் தரும் தேன் சுனையே ஆதரிப்பாய் ஆதரிப்பாய் எனையே கண்களைக் காக்கும் இமைகளைப்போல கருத்துடன் என்னைக் காப்பவள் நீயே விண்ணகம் ஆளும் வேந்தனின் தாயே விருப்புடன் மக்களை அரவணைப்பாயே உயரிய வானம் உன்னருள் தாயே உருகிடும் உள்ளம் உன் திரு உள்ளம் கடைக்கண் பார்வையில் கனிந்திடும் வெள்ளம் கருணையின் அன்பும் தாய்மையின் செல்வம் உன் புகழ் பாட ஒரு வரம் கேட்பேன் உன் பதம் சேர்ந்திட ஒருநாள் வருவேன் என் மனம் கேட்பதை நீ தர வேண்டும் என்றும் உன்னிடம் நான் வரவேண்டும் அன்னை என்றால் அன்பின் எல்லை அன்புக்கு உவமை வேறேதும் இல்லை அன்பால் கனிந்த தாயே வாழ்க அருள் நிறை அன்னை மரியே வாழ்க |