1085-பயணத்தின் பாதுகாவலியே |
பயணத்தின் பாதுகாவலியே சிந்தாத்திரை அன்னையே (2) பரிந்துரையாளராயிருந்து எம் பயணத்தை பாதுகாப்பீரே (2) அன்னையே வாழ்க - வாழ்க வாழ்க மரியே வாழ்க - வாழ்க வாழ்க தாயே நீ வாழ்க (2) கொந்தளிக்கும் கடல்மீது ஆட்சி செலுத்தி புயலை அடக்கினீரே அவர் அன்னையே வாழ்க - அவர் தாயே வாழ்க கானாவூர் திருமணப்பந்தியிலே மகிழ்ச்சியைத் தந்தீரே அவர் அன்னையே வாழ்க - அவர் தாயே வாழ்க மலைகள் மீது செல்லும்போது இடராமல் காக்கும் தாயே ஆறுகளைக் கடந்து செல்லும்போது மூழ்காமல் காக்கும் தாயே தீயில் நடந்தாலும் சுட்டு எரிக்காமல் பாதுகாக்கும் எங்கள் தாயே தீமை வந்தாலும் துயரம் சூழ்ந்தாலும் எம்மை மீட்கும் தாயே அன்னையே வாழ்க..... வாழ்க... வாழ்க...... மரியே வாழ்க..... வாழ்க.... வாழ்க.... தாயே நீ வாழ்க (2) அன்றாட உணவைக் கேட்பவர்க்கு அழியா உணவானீர் அவர் அன்னையே வாழ்க - அவர் தாயே வாழ்க ஒரு சொல் போதும் என்றவர்க்கு புதுமை புரிந்தீரே அவர் அன்னையே வாழ்க - அவர் தாயே வாழ்க ஆண்டவர் உம்முடனே என்றபோது ஆகட்டும் என்றவள் தாயே கல்வாரிப்பாதையில் செல்லும்போது உறுதி ஊட்டியவள் தாயே தீயாக செம்மறியே தேவமைந்தனை மடியில் சுமந்த எங்கள் தாயே ஆன்மா உடலோடு அமல உற்பவியாய் விண்ணகம் சென்ற தாயே அன்னையே வாழ்க... வாழ்க... வாழ்க.... மரியே வாழ்க.... வாழ்க....... வாழ்க.... தாயே நீ வாழ்க |