Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1084-நாதத்தின் இனிமையில்  

நாதத்தின் இனிமையில் பண் பாடுவோம்
எந்நாளுமே அன்னையின் பண் பாடுவோம்
நெஞ்சத்தில் நிறைந்திடும் நம் அன்னைக்குப்
புகழ் பாக்கள் பாடிடுவோம்
ஆ ஆ அன்னையே வாழ்க
அருளால் நிறைந்த அன்னையே நீ வாழ்க

இறைவனின் திரு உள்ளத்தை
நிறைவேற்றிட மனமுவந்தாய் - என்றும்
மறைபுகழ் உன் வழி இறையுளம் அறிந்திட
குறையின்றிக் காத்திடுவாய்

தரணிக்குத் தாயானாய் - திரு
தாய்மையைப் பாடுகின்றோம் - என்றும்
திருவாய் இயேசுவின் அன்பர்கள் ஆகிட
தாயே உன் அருள் தாராய்







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா