Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1082-தினம் தினம் எனில்  


தினம் தினம் எனில் அருள் வரம் தரும்
மரியே தாய் மரியே
வசந்தங்கள் வரும் வாழ்வினில் இன்று (2)
உனை நான் வாழ்த்த வந்தேன்

வானதூதர் வாழ்த்துச் சொல்ல
வாழ்வைச் சுமந்தவளே
வாடி நின்ற மாந்தர் நெஞ்சில்
வசந்தம் வீசச் செய்தாய் (2)
மனமதில் வலம் வரும் வளர் பிறையே
வழியினில் ஒளி தரும் விடிவெள்ளியே (2)
எந்தன் அருளே அழகே அன்பே
அமுதே ஆண்டவனின் தாயே

காலமெல்லாம் காத்திருந்த
கடவுளைக் காணச் செய்தாய்
காக்கும் தேவன் கரங்களை ஏந்தி என்
வாழ்வில் உணர வைத்தாய் (2)
இதயத்தில் எழுந்திடும் இறையவளே
இகமதில் சுடரெனத் திகழ்பவளே (2)
புது உலகம் மலர்ந்திட புதுமைகள் புரியும் லூர்து நாயகியே








 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா