Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1080-திருப்பயண மாதாவே  


திருப்பயண மாதாவே வணக்கம் அம்மா - எம்
பயணத்திலே துணையிருக்க வாரும் அம்மா
அருள் தாரும் அம்மா

உறவினளாம் எலிசபேத்திற்கு உதவிய பயணம் ஆ.
இறைமகனைக் காப்பாற்றிட எகிப்துக்குப் பயணம்
சிலுவை வழி இறுதிவரை இயேசுவின் பயணம்
சிறியோர் எமைச் சீர்படுத்த உமைநோக்கி பயணம்
பயணம் உந்தன் பயணம் - அரும்
பயன்;கள் தந்த பயணம்

விசுவசித்துப் பேறு பெற பயணம் செய்கிறோம் ஆ..
விசுவசித்து குணமடைய பயணம் செய்கிறோம்
விசுவசித்து விடுதலை பெற பயணம் செய்கிறோம்
விசுவசித்து மனந்திரும்ப பயணம் செய்கிறோம்
பயணம் எங்கள் பயணம் - அரும்
பயன்கள் தரும் பயணம்








 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா