Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1080-தாயே உன் பாத மலரினிலே  
தாயே உன் பாத மலரினிலே என்றும்
வாடாத மலராக நானிருப்பேன் (2)

தாயென்னை மறந்தாலும்
நீ மட்டும் நாளும் சேயாக அணைக்கின்ற
தாய்மரி நீயே (2)

கல்வாரி மலைமேலே நமக்கான உறவால்
கனிவோடு வந்தாயே தாய் என்ற நினைவால் (2)
கடலிலும் பெரியது உன் உள்ளம் அம்மா - 2
கடுகிலும் சிறிய என் துயர் தீர்ப்பாய்

துன்பத்தின் ஆழத்தைக் கண்டவள் நீயே
துன்புற்ற போதும் துவளாத தாயே (2)
வாழ்க்கையின் நெறிமுறை எமக்குரைத்தாயே - 2
வாவென பார்வையில் எனை அழைத்தாயே







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா