1078-தாவீதின் குலமலரே |
தாவீதின் குலமலரே ஒளி தாங்கிடும் அகல் விளக்கே - எமைக் காத்திடும் ஆரணங்கே - அருள் சுரந்திடும் தேவ சுனையே இறைவனே முதலில் உனைத் தெரிந்தார் கறை சிறிதில்லாக் காத்திருந்தார் மறையவர் புகழும் மாமணியே கரை சேர்ப்பதுவே உன் பணியே மக்களின் மனமே மகிழ்ந்திடவே நற்கனி சுதனை எமக்களித்தாய் கற்றவர் மற்றவர் யாவருமே பொற்பதம் சேர்ந்திட வேண்டுமம்மா |