1077-தாரகை சூடும் மாமரியே |
தாரகை சூடும் மாமரியே தாளினைப் பணிந்தோம் காத்திடுவாய் தேவனை உலகுக்கு அளித்தவளே தேடிய துணையைக் கொடுத்தவளே வாடிய மகவை அணைப்பவளே வாழிய ஞானியர் காவலியே தென்னகக் கன்னிக் கடலலையும் பண்ணெழில் இமய மாமலையும் மெல்லெழியாள் எம் தாயகமும் உன் புகழ் பணிந்தே பாடாதோ |