1075-தாயே உன் பாதம் |
தாயே உன் பாதம் தஞ்சமென்றோடி வந்தோம் - 2 நீயல்லால் ஓர் துணை யாருமில்லாதது நிட்சயம் நிட்சயமே வானோர்க்கரசியாய் மாட்சி சுருதியாய் மங்கா ஒளி சுடராய் - அருள் ஞானோ கிருபை சிம்மாசனமாகிய நாயகியே மரியே - 2 - (தாயே) பாவிகட்காதாரமாகவே சீர் அருள் மேவி அடைந்தவளே - எங்கள் சீவியமாகிய மாமரியே உந்தன் காவலை அண்டி வந்தோம் - 2 (தாயே) பத்திராசரும் ஒத்த வியப்புடன் நித்தமும் உம்மை ஸ்துதிக்க - விடா ஸ்துத்தியம் எத்திசை சத்தித்தொலித்திடு உத்தமியே தாயே - 2 (தாயே) உம்மைச் சலுகையால் தேடி வந்தோரென்றும் உற்ற பலன் அடையாப் போனது இம்மையில் கேட்டது இல்லை நாம் என்பதால் இன்றும்மை நாடி வந்தோம் (தாயே) |