1075-தாயே உன் புகழ் பாடிடுவோம் |
தாயே உன் புகழ் பாடிடுவோம் தரணியில் உம்மை வாழ்த்திப் போற்றிடுவோம் தாயே உன் புகழ் பாடிடுவோம் ஜென்ம மாசணுகா அமலியே உம்மை ஜெகத்தில் நாம் துதித்து வணங்கிடுவோமே ஏவை செய் பாவமின்றி நீ பிறந்தாய் ஏகனின் அன்புத் தாயென உதித்தாய் முட்கள் நடுவில் லீலி மலரென முற்றிலும் அழகியாய் அவதரித்தாயே எத்திசையினரும் எத்தேசத்தினரும் எம்மதத்தோரும் நல்மனதுடனே 2 பரமனின் அன்னையைத் தம் அன்னையாக பெற்றிடும் வரத்தை அடைந்திடத்தாயே |