1074-தரணியர் வாழ்த்தும் தாய் மரியே |
தரணியர் வாழ்த்தும் தாய் மரியே வரம் விழைந்தோம் யாம் வாழ்வளிப்பாயே குவலயம் போற்றிடும் கோமகனை குறையினைப் போக்கிடக் கொடுத்தவளே - 2 குறையற மனுக்குலம் மிளிர்ந்திடவே - 2 கருணையின் முகில்தனைப் பரப்பிடுவாய் சிலுவையின் அடியிலெம் தாயானாய் இளைய உன் பிள்ளைகளானோமன்றோ - 2 சிலுவை சுமந்திடத் துணை புரிவாய் - 2 சிதறுண்ட மந்தையை ஒன்று சேர்ப்பாய் தரணியின் அரசியும் நீயன்றோ தாழ்ச்சியின் வடிவமும் நீயன்றோ - 2 தாயினும் சிறந்தவள் நீயன்றோ - 2 தாசருக் குறுதுணை நீயன்றோ |