1073-தவமிருந்தோம் உம்மைக் காண |
தவமிருந்தோம் உம்மைக் காண அம்மா மரியே தரிசனம் நீ தரவேண்டும் ஏழை எமக்கே (2) உந்தன் அன்பு ஒன்றே போதும் உன்னைப் பாடும் ஜீவநாதம் (2) எங்கள் அன்னையே எங்கள் அன்னையே அம்மா மரியே தாயே மரியே - 2 அகிலம் போற்றும் அன்னை மரியே ஆண்டவனின் அன்புத் தாயே ஞாலம் போற்றும் ஞானம் நீயே காலம் போற்றும் கன்னித் தாயே (2) எங்கள் குறை யாம் உணர்ந்தோம் - 2 உந்தன் பாதம் நாடி வந்தோம் யாருமில்லா ஏழை - எங்கள் துயரம் போக்குவாய் (2) அம்மா மரியே தாயே மரியே - 2 இதோ உந்தன் அடிமை என்றாய் இறைவனின் அன்னையானாய் பெண்களுள் நீ பேறுபெற்றாய் அருள் நிறை அன்னையானாய் (2) கோடி மக்கள் குறைகள் எல்லாம் - 2 தீர்த்து வைக்கும் எங்கள் தாயே தஞ்சம் என்று நாடி - வந்தோம் கருணை காட்டுவாய் (2) அம்மா மரியே தாயே மரியே 2 |