Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1072-ஞானம் நிறை கன்னியே  
ஞானம் நிறை கன்னியே
நாதனைத் தாங்கிய ஆலயமே - 2
மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2
பலி பீடமாய் அலங்கரித்தாயே ஞானம்

பாவ நிழலே அணுகா
பாதுகாத்தார் உன்னையே பரமன் - 2
தாய் உதரம் நீ தரித்திடவே - 2
தனதோர் அமல தளம் எனக்கொண்டார் - ஞானம்

வாழ்வோர் அனைவரின் தாயே
வான் உலகை அடையும் வழியே  2
வாஞ்சையோடணைக்கும் தாரகையே - 2
வாடிய மனிதர் கதி எனக் கொண்டோம் - ஞானம்







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா