1071-சென்மத்தின் மாசில்லாத தாயை |
சென்மத்தின் மாசில்லாத தாயை செகத்தில் வாழ்த்திப் போற்றுவோம் வன்மப் பிசாசின் தீய மாயை மறையுமே விட்டெங்களை ஆதி சர்ப்பத்தை மாசில்லாத் தன் அடிகளால் மிதித்திட்டாள் வாதை கொண்டது நஞ்சை கான்று வருந்துமே வருந்துமே மாசறு வெண்ணிலாவைப் போல மசபியேல் குகையிலே மாசிலுற்பவம் நானென்றாளே மரியம்மாள் மரியம்மாள் மாசில் வெண்ணிற ஆடை தாங்கி மரியம்மாள் உற்பவித்தாள் வாசம் சேர் லீலிப் பூவைப்போல் வந்துதித்தாள் வந்துதித்தாள் |