Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1068-சகாயத்தாயே எங்கள் சந்தோஸம் நீயே  
சகாயத்தாயே எங்கள் சந்தோஸம் நீயே
சதா எம்மைத் தேற்றுகின்ற தேவனின் தாயே
உம்மை மன்றாடி நலம் அடைந்தோம்
கொண்டாடி நன்றி பொழிந்தோம்

மாதா நீ ஈன்ற எங்கள் தெய்வம்
நீ தான் அவர் சொன்ன யாவும் செய்த நெஞ்சம்
மரியே மாமரியே எங்கள் நல் மாதிரியே
உம்மையுன் பிள்ளைகளாய் அரவணைத்தாயே
உம்மை மன்றாடி நலம் அடைந்தோம்
கொண்டாடி நன்றி பொழிந்தோம்

அம்மா உன் பாதம் வீழ்ந்து கிடக்கும் மலர்கள்
அன்பும் நிம்மதியும் வேண்டும் எங்கள் மனங்கள்
உன்னையே சரணடைந்தோம்
உன்னருள் கரம் விழைந்தோம்
இன்னலில் இடறாமல் நல் வழி நடக்க
உம்மை மன்றாடி நலம் அடைந்தோம்
கொண்டாடி நன்றி பொழிந்தோம்







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா