Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   1067-கருவினில் கடவுளை  

கருவினில் கடவுளை சுமந்தவளே அம்மா
அருளினை நினைவாய்க் கொண்டவளே அம்மா - உன்
மார்போடு நான் சாய்ந்து மகிழ வேண்டும் அம்மா - உன்
மடிமீது தலை சாய்த்து உறங்க வேண்டும் அம்மா

உந்தன் பெயரை ஒருமுறை சொன்னால்
உள்ளம் இங்கே மகிழ்கின்றது
கண்கள் மூடி கரங்கள் குவித்தால்
புதுமைகள் கோடி நிகழ்கின்றது
அம்மா நானுன் பிள்ளை
தொல்லை இனி இல்லை - உன்
திருவடி அமர்வது போதுமம்மா
திருவருள் வாழ்வில் சேருமம்மா

இதோ உன் அடிமை என்றவளே
இவ்வுலகத்தின் தாயாய் உதித்தவளே
இறைவன் இயேசுவின் தியாகப்பலியிலே
சிலுவை வரைக்கும் சென்றவளே
அம்மா என் அடைக்கலமே - இம்
மாநில இராக்கினியே - உன்
திருவடி அமர்வது போதுமம்மா
திருவருள் வாழ்வில் சேருமம்மா


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்