1059- |
கதிரவனை ஆடையாய் கொண்ட கன்னிமரி வாழ்க பிறை நிலவை மிதியாய் கொண்ட அன்னைமரி வாழ்க அருள் நிறை மரியே இறைவனின் தாயே பெண்குலத்தின் பெருமையே பேறு பெற்றவளே போற்றுவோம் புகழுவோம் மாதாவை வாழ்த்துவோம் (2) விண்ணக மண்ணக அரசி நீயல்லோ வேந்தனவர் தாயும் நீயல்லோ ஆகட்டும் என்ற சொல்லாலே அகிலத்தையே மீட்பீர் (2) அண்டிவரும் பக்தர்களின் அவலக்குரல் கேட்பீர் (2) சுவக்கீன் அன்னம்மாள் பெற்ற முத்தல்லோ சுதந்திரத்தை அளித்த தாயல்லோ நடமாடும் பேழையாய் இறைமகனை சுமந்தீர் நாடிவந்து எலிசபெத்தை உள்ளம் மகிழச் செய்தீர் சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ உம் மகனின் பலியால் மனுக்குலத்தின் தாயானாய் உமது அருள் வேண்டும் எமது அபயக்குரல் கேட்பீர் |