Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1054-கருணை நிறைந்தவளே  

கருணை நிறைந்தவளே - அம்மா
கனிவைக் கொடுப்பவளே
பரிந்து பேசுபவளே - நீ
கன்னி மரியே
ஆ....வே ஆ......வே (2)

பாவமின்றிப் பிறந்தவளே
பாவையர்க்கு மாதிரியே
ஆவியினால் நிறைந்தவளே
ஆண்டவர்க்குப் பணிந்தவளே
பாவம் செய்த இம்மானிடர்க்கு (2)
உன் மகனைக் கொடுத்தவளே
வாழ்க அம்மா வாழ்க - நீ
வாழ்க என்றும் வாழ்க

வாழ்வினிலே ஒளிவிளக்காய்
வாழ்ந்து வரும் நாயகியே
பாரினிலே மாந்தருக்கு
வழித்துணையாய் இருப்பவளே
பாதம் தேடி உனை நாடி வந்தோம் (2)
அணைத்தெம்மைக் காத்திடுவாய்
வாழ்க அம்மா வாழ்க - நீ
வாழ்க என்றும் வாழ்க








 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா