1063-ஒருவார்த்தை சொல்லம்மா |
அம்மா லூர்து மாநகர் ஆரோக்கியத் தாயே அடைக்கலம் நீயே அண்டி வந்தேன் உம்மையே அரவணைப்பாய் எம்மையே ஒருவார்த்தை சொல்லம்மா நீ எனக்கு உம்மகன் யேசுவிடம் பரிந்துரைத்து ஆறாத காயங்கள் மனதினை வருத்த தீராத சோகங்கள் நெஞ்சினை உருக்க பாதையேதும் அறியாத சிறுகுழந்தைபோல பரிதவித்து அலைந்து நிற்கிறேன் கானாவூர் திருமணத்தில் ஒரு வார்த்தை சொன்னாய் கனிவுடனே உம் மைந்தர்; புதுமையினைப் புரிந்தார்; வெறுமையான என்வாழ்வு நிறைவாழ்வு அடைய கருணையோடு ஒரு வார்த்தை சொல்லம்மா எனக்கு |