1062-ஓ அன்னையே உன் பிள்ளை |
ஓ அன்னையே உன் பிள்ளை நான் அல்லவோ என்னை நீ கை நெகிழாயே - உத்தமி என்னைப் பெற்ற தாயிலும் மிக்க அன்புள்ள இரட்சகி இரட்சகி உன்னை நம்பினேன் உன்னத கடவுளின் தாயாய் - ஒப்பில்லா வல்லமை உடையவளாய் அன்னை நீ இருக்கையிலே அலகைக்கும் நரகுக்கும் உலகத்தின் மயலுக்கும் அஞ்சிடேனே பஞ்சம் போர் பிணி நோய் - பாரினில் பலுகியே வருத்துதம்மா தஞ்சம் என அடைந்தோம் உன் மகன் யேசுவை எம்மிடர் தீர்த்திட வேண்டுவாயே |