Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1059-எந்தன் ஆன்மா தேவனை  


எந்தன் ஆன்மா தேவனை
ஏத்திப் போற்றிடுதே (2)
என் தாழ்நிலையைப் போக்கினார்
நெஞ்சம் மகிழ்கின்றதே - அவரில்
நெஞ்சம் மகிழ்கின்றதே ஆ...
நெஞ்சம் மகிழ்கின்றதே

வல்லவர் அவர் என்னிலே
பெரியனப் புரிந்தார் (2)
அதனால் என்னை எல்லா மாந்தரும்
இனி வாழ்த்திப் போற்றிடுவார்
தூயராம் அவர் தாழ்ப்பணிந்தோர்
வழிவந்தார்க்கும் தயை தந்தார் (2)

வன்கரம் அவர் நீட்டினார்
செருக்குற்றோர் சிதைந்தார் (2)
அவரே வலியோர் தம்மை வீழ்த்தினார்
நெஞ்சில் எளியோர்க்கேற்றம் தந்தார்
பசித்த யாவர்க்கும் நிறைவு ஈந்தார்
செல்வர்க்கெல்லாம் துயர் தந்தார் (2)








 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா