1008- |
எங்கள் அம்மா என்று உன்னை அழைக்கையிலே நெஞ்சில் ஆறுதல் பிறக்குதம்மா உந்தன் அன்பால் எம்மை அணைக்கையிலே எங்கள் இதயம் மகிழுதம்மா (2) ஓ மரியே வாழ்க - 4 என் நெஞ்சில் நிலையாக கோயில் கொண்டாய் எப்போதும் வசந்தமாய் வாசல் வந்தாய் (2) விடிவெள்ளியாக நீ வரும் போது விடியாத இரவுகள் ஏதம்மா முடிவொன்று சொல்ல நீ உள்ள போது முடியாத முடிவுகள் ஏதம்மா உனைப் பாடவே நான் வாழ்கின்றேன் செபமாலைத் தாய்மரியே - எங்கள் செபமாலைத் தாய்மரியே ஓ மரியே வாழ்க - 4 எல்லோர்க்கும் தாயாக நீயே வந்தாய் இதயத்தில் ஆனந்தம் கோடி தந்தாய் (2) வளமான வாழ்வு நீ தரும் போது வணங்காத உயிர்களும் ஏதம்மா கனிவான உந்தன் கருணைக்கு உலகில் ஈடிணையேதும் இல்லையம்மா மனம் உருகவே உனைப் பாடுவேன் செபமாலைத் தாய்மரியே - எங்கள் செபமாலைத் தாய்மரியே ஓ மரியே வாழ்க - 4 |