1008-என் குரல் கேளம்மா |
என் குரல் கேளம்மா உன் பிள்ளை நானம்மா தாயே உன் தயை வேண்டி என்றும் என் கண்கள் ஏங்கிடுதே உன் பிள்ளை நான் கண்ணீர் சிந்த தாயே நீ பொறுப்பாயோ உன் மகன் யேசுவிடம் எனக்காக பரிந்துரைக்க மறப்பாயோ என்னை நீ மறுப்பாயோ அம்மா உன்னை நம்பும் என்னை அனாதையாய் விடுவாயோ உன் அருள் பெற்றாலே என் வாழ்வு நலமாகும் அறிவேனே என் தஞ்சம் நீ தானே |