Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1056-எம் தாயே உன் பாதம்  

எம் தாயே உன் பாதம் ஓடி வந்தோம்
எம் துயர் தீர்த்தருள் இன்னமுதே
சுந்தரமா மடு வாழும் அம்மா
துணை தந்து காப்பாய் எந்நாளுமே

பூமியின் முட்களுள் சிக்குண்டோமே
பூலோக ராணியே என் கண் பாராய்
நாமினி உன் துணை கண்டடைந்தோம்
நற்தாயின் பிள்ளைகள் நாமல்லவோ

காடுமலை ஆறு கண்டு வந்தோம்
கானகச் செல்வியைக் காண வந்தோம்
நீடு துயரெல்லாம் போக்க வந்தோம்
நீங்கா அடைக்கலம் தந்தருள்வாய்

பஞ்சம் பிணிகளை நீக்குமம்மா
பாவிக் கடைக்கண் தாருமம்மா
தஞ்சம் உனதடிக் கால்கள் தொட்டோ
பிஞ்சுத் தளிர்க்கரம் நீட்டுமம்மா









 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா