1055-உன்னைத் தேடி வந்தேன் |
உன்னைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள் தாருமம்மா - 2 முடமான மகனை நடமாட வைத்தாய் கடல் நீரில் தவித்த கப்பலைக் காத்தாய் பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் பொருள் கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் - 2 கடல் நீரும் கூட உன்கோயில் காண அலையாக வந்து உன்பாதம் சேரும் அருள் தேடி நாங்கள் உன்பாதம் பணிந்தோம் அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா -2 |