Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1053-இனிய உன் நாமம்  


இனிய உன் நாமம் ஓதிடத் தினமே
அனைவரும் மகிழ்வோமே
தாயினும் மேலாம் தாயுமே நீயே
தமியோர் திரவியமே

அன்பிதே அன்பிதே மாதா
தன்னலமேயற்ற மாதா - தாயினும்

கலை மொழியால் உனைத் துதித்திட நாளும்
கவலைகள் நீங்குமம்மா
பலவகைக் பாகும் தெளிவுறு தேனும்
தெவிட்டா உணவாமே - அன்பிதே

பஞ்சமும் நோயும் பசியும் தீர
பார்த்திபன் யேசுவையே
அஞ்சலி புரிவோம் அம்மா மரியே
அனைவரும் துதிப்போமே - அன்பிதே







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா