1050-இடைவிடா சகாயமாதா |
இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா பவவினை தீர்ப்பாள் பதம் உனை சேர்ப்பாள் நிதம் துணை சேர்ப்பாயே ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் மாறாத கொடுமை நீங்காத வறுமை தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2 கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி உள்ளம் திறந்து சொல் உன் கதையை வெள்ளம் போல் அவள் கருணை பாய்ந்திட தேன் ஊறும் வான் வாழ்வு தந்திடுவாள் - 2 |