1048-ஆரோக்கியத்தாயே தாய்மரிய |
ஆரோக்கியத்தாயே தாய்மரியே - எமை அரவணைத்தாளும் மாமரியே (2) வாழ்க வாழ்க மரியே - என்றும் வாழ்க வாழ்க மரியே (2) ஆகட்டும் என்று பணிந்தவரே - இறை வார்த்தையாம் இயேசுவை சுமந்தவரே (2) பரிசுத்தமானவரே அம்மா பாசத்தின் தாய்மரியே - 2 உம் ஆலயம் வந்தோம் ஆனந்தம் அடைந்தோம் அண்டிவந்தோர் குறை தீர்த்தவரே - எம்மில் அனுதினம் அருள் மழை பொழிபவரே (2) ஆறுதலானவரே அம்மா ஆரோக்கியத் தாய்மரியே - 2 உம் ஆலயம் வந்தோம் ஆனந்தம் அடைந்தோம் முடவன் தந்த மோரைப் பருகிக்கொண்டே அவன் குறைகளை நீக்கிட நினைத்தாயே நடந்திடக் கால்களும் நோயற்ற வாழ்வும் இயேசுவின் அருளால் கொடுத்தாயே - 2 பாலன் இயேசுவின் பசியைப் போக்கவே பசும்பால் வாங்கித் தந்தாயே - இந்த உலகம் உள்ளவரை உன்னை வேண்டிக்கொள்ளும் அடிமைகள் வாழ்ந்திட அருள்புரிவாய் - 2 சக்தி விளங்கும் உந்தன் தரிசனம் கிடைத்தால் சஞ்சலம் யாவும் தீர்ந்திடுமே பக்தியுடன் உன்னைப் பணிந்து போற்றுபவர் வாழ்வினிலே இன்பம் நிறைந்திடுமே - 2 கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின் கண்ணீரைக் கனிவுடன் துடைத்தாயே நமது நன்னாளில் வந்து தானங்கள் செய்பவர் உன்னத நிலை பெற வைத்தாயே - 2 |