1046-ஆயிரம் முழுநிலவோ |
ஆயிரம் முழுநிலவோ அன்னை உந்தன் முகப் பொலிவு யேசுவின் திரு இரத்தத்தின் அரசியே (2) என் இதயத்தை ஆள்பவளே என் இதயத்தை ஆள்பவளே அள்ளித் தருவாய் உன் அருள்தனையே அகற்றும் மனதின் இருளினையே அஞ்சி அஞ்சி வாழ்கின்றோம் அனுதினமும் அல்லல் வந்து வாட்டுது எக்கணமும் அழைப்பவளே --அன்பாய் அணைப்பவளே உன் அருகினில் இருந்தால் பயமில்லையே உன் கரமேந்தும் இறைமகனைப் போல் - இந்த உலகில் உம் மக்களைக் காத்திடுமே அள்ளித் தருவாய் உன் அருள்தனையே அகற்றும் மனதின் இருளினையே உம்மில் உருக்கொண்ட இறைவனுக்கு உன் உதிரத்தைப் பாலாக்கி வளர்த்தவளே புது உடன்படிக்கை செய்யக் கல்வாரியில் - தன் உதிரத்தைச் சிந்தினார் சிலுவையிலே அந்த உன்னதரின் பலிதனிலே உம்முடன் எம்மையும் இணைத்திடுமே அள்ளித் தருவாய் உன் அருள்தனையே அகற்றும் மனதின் இருளினையே |