1045-ஆசி பெற்றவரே |
ஆசி பெற்றவரே - பெண்களுக்குள் ஆசி பெற்றவரே ஆகட்டும் என்றவரே - ஆண்டவரின் அற்புதம் கண்டவரே போற்றுகிறோம் புகழுகிறோம் அம்மா மாமரியே வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் அம்மா ஆதரியே தாழ்நிலையில் இருந்த உம்மை தலைமுறைகள் பாடுதே தாய்மைப் பேறு பெற்றதால் தரணி வாழுதே அம்மா தரணி வாழுதே கடவுளால் இயலாத காரியங்கள் இல்லையே கடவுள் அருளைக் கண்டதால் கலக்கம் இல்லையே உன்னில் கலக்கம் இல்லையே |