Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1042-அன்னை மாமரியே அழகிய ஓவியமே  
அன்னை மாமரியே அழகிய ஓவியமே
ஆவியின் ஆலயமே -அம்மா இறையன்பின் காவியமே -2

அன்பின் கருவே அருளின் நிறைவே
அகிலத்தை அணைப்பவளே
மண்ணில் மனிதம் மாண்புடன் திகழ
விண்ணில் ஜெபிப்பவளே
தாழ்சிசியின் உருவே தாய்மையின் உயர்வே
தரணியைக் காப்பவளே
வழித்துணை நாடி உம் அடைக்கலம் தேடி
உன் பதம் ஓடி வந்தோம்

தீயவன் பிடியில் மயங்கிடும் மாந்தரை
தாயகம் சேர்ப்பவளே
புனிதத்தின் வழியில் புரட்சியை விதைத்து
புது யுகம் படைப்பவளே
பாதையின் விளக்காய் பயணத்தில் துணையாய்
பாங்குடன் வருபவளே
வழித்துணை நாடி உம் அடைக்கலம் தேடி
உன் பதம் ஓடி வந்தோம்







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா