Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1040-அன்னையே காணிக்கைத் தாயே  
அன்னையே காணிக்கைத் தாயே
இறையருள் ஓவியம் நீயே (2)
காரிருள் நீக்கிடும் நிலவே
தாயருள் தந்திடும் முகிலே
நம்பினேன் நம்பினேன் என் அன்னையே
நம்புவேன் நம்புவேன் உன் பிள்ளையை (2)

அம்மா எம் அருகினில் நீயிருந்தால்
ஆயிரம் சோகங்கள் கலைந்து விடும் (2)
சொல் ஒன்று போதும் சுமை தீர்ந்திடும்
சுகமான ராகங்கள் சுரம் பாடிடும் (2)
சுகமான ராகங்கள் சுரம் பாடிடும்
நம்பினேன் நம்பினேன் என் அன்னையே
நம்புவேன் நம்புவேன் உன் பிள்ளையை (2)

தாயே உம் சந்நிதி வந்துவிட்டால்
ஆறுதல் கோடி நிறையுதம்மா (2)
ஆகட்டும் என்ற உம் திருவசனம்
ஆயிரம் வேள்விகள் செய்யுதம்மா (2)
அர்ப்பணம் அளி;த்திட தூண்டுதம்மா
நம்பினேன் நம்பினேன் என் அன்னையே
நம்புவேன் நம்புவேன் உன் பிள்ளையை (2)







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா