1039-அன்னையே எங்கள் பனிமயத் தாயே |
அன்னையே எங்கள் பனிமயத் தாயே உம்மையே என்றும் சரணடைந்தோமே (2) எம்மையே என்றும் ஆதரிப்பாயே கடவுளின் தாயே - 2 இறைச்சித்தம் நிறைவேற்ற மனதினில் வைத்தாயே இறைவனையே மகனாக ஈன்றெடுத்தாயே (2) ஆண்டவனி;ன் அடிமையென தாழ்ந்து நீ நின்றாயே - 2 அருள் நிறைந்த மாது என உயர்வடைந்தாயே உலகிற்கு மீட்பதனை கொண்டு வந்தாயே உத்தமனாய் இயேசுவையே தந்து நின்றாயே (2) இடிதாங்கி பனிபொழிந்து புதுமைகள் செய்தாயே - 2 மனுக்குலத் தாயாக வரம் நீர் அடைந்தாயே |