1038-அன்னையே அருள் நிறை மரியே |
அன்னையே அருள் நிறை மரியே உம்மையே நாடி வந்தோமே (2) என் ஆண்டவரின் தாய் நீயம்மா - என் வேண்டுதலைக் கேளும் அம்மா நிறையாசீர் பெற்றவள் நீயே இறையாசீர் அளித்திடு தாயே தாயே மாமரியே வாழ்க - நாளும் எம்மைக் காத்தருள்வாயே (2) இறைவனின் வார்த்தை இயத்தில் ஏற்றாய் நிறைவினில் வாழ நினைவினில் வைத்தாய் தள்ளாடும் வேளையிலே தாங்கியே தேற்றிடுவாய் - 2 நிறையாசீர் பெற்றவள் நீயே இறையாசீர் அளித்திடு தாயே தாயே மாமரியே வாழ்க - நாளும் எம்மைக் காத்தருள்வாயே (2) ஆவியின் துணையில் ஆகட்டும் என்றாய் அவர் சொல்வதை என்றும் செய்யுங்கள் என்றாய் கண்ணீரால் கவலைகளால் - உம் கரம் பிடித்து வந்தேனம்மா (2) நிறையாசீர் பெற்றவள் நீயே இறையாசீர் அளித்திடு தாயே தாயே மாமரியே வாழ்க - நாளும் எம்மைக் காத்தருள்வாயே (2) |