1037-அன்னை மரி மாமரியே |
அன்னை மரி மாமரியே கன்னிமரி தாய்மரியே புகழ்வோம் பணிவோம் துதிப்போம் மகிழ்வோம் வாழ்க மாமரியே (2) மண்ணுலகின் மீட்பரை மடிசுமந்து பரிசுத்தமானாய் இறைமகளே (2) கலங்கிடும் போது உருகிடும் நீயே மாமரியே தவத்தாயே சாபத்தை நீக்கி மன்னித்து என்னைத் தூயவராக மாற்றிடுவாய் கண்மணியில் ஏற்றினேன் மணிவிளக்கு என் உயிரில் வாழ்ந்திடும் தாய் உனக்கு (2) கடலுடன் வானம் தொடுவது நாளும் கன்னிமரியே உனைத் தானே ஜீவனின் வேதம் பேரின்ப நாதம் நல்லருள் வேண்டி நாடிடுவோம் |